உலகம்உள்நாடுஒரு தேடல்சூடான செய்திகள் 1

இலங்கை மற்றும் மற்றைய நாடுகளில் அதிக வருமானம் ஈட்டும் யூடியூபர்கள்

(UTV | கொழும்பு) –  இலங்கை மற்றும் மற்றைய நாடுகளில் அதிக வருமானம் ஈட்டும் யூடியூபர்கள்

அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி சர்வதேச ரீதியில் , Cocomelon யூடியூப் சேனல் உலகில் அதிகம் பார்க்கப்படும், அதிகம் வருமானம் ஈட்டும் யூடியூப் சேனலலாக இடம்பிடித்துள்ளது.

2006 இல் உருவாக்கப்பட்டதிலிருந்து அதன் வீடியோக்களில் இருந்து $282.8m திரட்டப்பட்டதன் மூலம், குழந்தைகளுக்கான சேனல் Cocomelon எல்லா காலத்திலும் அதிக வருமானம் ஈட்டும் YouTube சேனலாகவுள்ளது.

குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்ட இந்த சேனல் 5 கண்டங்களில் அதிக லாபம் ஈட்டும் சேனலாக தெரிவாகியுள்ளது.

மேலும், இரண்டாம் இடத்தில் ரஷ்யாவின் Like Nastya ($167.5m) மற்றும்
முயன்றாம் இடத்தை ஆர்ஜென்டினாவின் El Reino Infantil ($102.2m) ஆகிய இரு சேனல்களும் பிடித்துள்ளன.

gaming chennel இல் 22 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன், அமெரிக்க யூடியூபர் FGTeeV எந்த கேமிங் சேனலையும் விட அதிகமாக சம்பாதித்துள்ளது,

அதே போன்றும் நம் நாட்டில் ‘அபே அம்மா’ யூடியூப் சேனல், அதிக வருமானம் ஈட்டும் யூடியூப் சேனலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

‘Ape Amma’ விளம்பர வருவாய் மூலம் மட்டும் 962 அமெரிக்க டொலர்களை சம்பாதிப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
உணவு தொடர்பான உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் ‘அபே அம்மா’, ஆசியாவில் உள்ள சிறந்த யூடியூப் சேனல்களில் ஒன்றாகவும் தெரிவாகியுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

குழந்தைக்கு மதுபானம் கொடுத்த தந்தை உட்பட நால்வர் கைது !

சத்திர சிகிச்சைகள் மற்றும் கிளினிக் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை