உள்நாடு

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் சுதந்திர தினத்தில் விடுதலை

(UTV | கொழும்பு) – தமிழ் அரசியல் கைதிகள் மூவர் சுதந்திர தினத்தில் விடுதலை

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகள் மூவர்விடுதலை செய்யப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் கொலைக் குற்றவாளியை விடுவிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் 2008 ஜனவரி முதலாம் திகதியன்று கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதேவேளை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவைக் கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காகத் தண்டனை பெற்றுவரும் கைதியும் விடுவிக்கப்பட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதலாளியை விடுவிக்க விரும்புவதாக பொன்சேகா பாராளுமன்றத்தில் அறிவித்தபோதிலும் அவரது கையொப்பம் இடப்பட்ட ஒப்புதல் பெறப்படவில்லை.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் இன்னும் அவரிடம் கலந்தா லோசிக்கவில்லை என பொன்சேகாவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மாணவன், மாணவியை கொடூரமாக தாக்கிய தேரரால் சர்ச்சை!

சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு

கொழும்பு துறைமுகநகர சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்