உள்நாடு

 நாடு முழுவதும் நாளை முதல் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்

(UTV | கொழும்பு) –  நாடு முழுவதும் நாளை முதல் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

ஜனவரி 31 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி 01ஆம் திகதி குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், சில இடங்களில் 150mm அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

அதன்படி, நாட்டில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அவ்வாறு, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
-வானிலை அறிக்கை மைய்யம்-

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய பணிப்புரை

நான் இன்னும் மொட்டுதான், ஐக்கிய தேசியக் கட்சிக்குச் செல்லவில்லை

editor

கொவிட்-19 நிதிய வைப்பு மீதி 737 மில்லியனை கடந்தது