உள்நாடு

தொடரும் அச்சுறுத்தல் சம்பவங்கள்

(UTV | கொழும்பு) –  தொடரும் அச்சுறுத்தல் சம்பவங்கள்

மொரகஹஹேன, ஒலபொடுவ, பின்னகொலவத்த பிரதேசத்தில் வர்த்தக நிலையம் மற்றும் அதனை அண்டிய வீடு ஆகியவற்றில் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு பயன்படுத்திய வாள் ஒன்றும், சுமார் ஒரு அடி நீளமான கத்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இருவரும் கூரிய ஆயுதங்களுடன் வந்து வீட்டின் குடியிருப்பவர்களை அச்சுறுத்திய காட்சி வீட்டின் முன் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமெராவில் பதிவாகி இருந்தது.

இதன்போது அவர்கள் மேலும் பல சொத்துக்களைத் தாக்கி சேதப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் வர்த்தகர் மற்றும் பிரதேசவாசிகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரின் தாக்குதலினால் வீட்டின் முன் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராக்கள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள், ஒரு நாற்காலி, பக்கத்து வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள் என்பன கடுமையாக சேதமடைந்துள்ளதாக ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் 26 மற்றும் 43 வயதுடைய அதே பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்..

சந்தேக நபர்களை ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் சுனில் குணரத்ன உத்தரவிட்டுள்ளார்.

மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இராஜாங்க அமைச்சர் ஜயந்த இராஜினாமா

அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதியின் தவறான முடிவு – பொதுஜனபெரமுன

நாளை 4 புதிய எம்.பிக்கள் பதவிப்பிரமாணத்தின் பின் புதிய சபாநாயகர் தெரிவு

editor