உள்நாடு

சாரதி அனுமதி பத்திரம் வைத்திருப்போருக்கான அறிவிப்பு!!!!!!

(UTV | கொழும்பு) – சாரதி அனுமதி பத்திரம் வைத்திருப்போருக்கான அறிவிப்பு!!!

மொத்த சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரம் கொண்டவர்களின் எண்ணிக்கை 126 இலட்சத்து 71 ஆயிரத்து 207 பேர் எனவும்

இவர்களில் 18 லட்சத்து 54 ஆயிரத்து 27 பேருக்கு NDL எண்கள் கொண்ட ஓட்டுநர் உரிமப் புத்தகங்களும்,
29 லட்சத்து 58 ஆயிரத்து 925 பேருக்கு A எண்ணுடன் அச்சிடப்பட்ட ஓட்டுநர் உரிம அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும்,

தற்போது பயன்பாட்டில் உள்ள ஸ்மார்ட் அட்டைகளுடன் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 78 லட்சத்து 58 ஆயிரத்து 255 ஆகும்.
379 ஆயிரத்து 260 சாரதி அனுமதிப்பத்திரங்கள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் காலாவதியாகிவிட்டன மேலும் அவை புதுப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், பல்வேறு விபத்துகளை ஏற்படுத்துதல் போன்ற குற்றங்களுக்காக
இந்த ஆண்டின் முதல் மூன்று வாரங்களில் இரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமங்களின் எண்ணிக்கை 281 ஆகும்.

அச்சிடப்படும் அட்டைகள் தட்டுப்பாடு காரணமாக கடந்த வருடம் எட்டு மாதங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படுவதை நிறுத்தியதாகவும்,
இந்தக் காலப்பகுதியில் 7 லட்சத்து 47 ஆயிரத்து 801 ஒன்று காலாவதியான மற்றும் புதிதாக விண்ணப்பித்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் தேவைப்படுவதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமையும் குமுறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனாவிலிருந்து 83 பேர் குணமடைந்தனர்

மேலும் 55 பேர் குணமடைந்தனர்

குற்றமற்றவராக கருதி அசாத் சாலி விடுதலை