உள்நாடு

 srilankan airlines இன் 42 விமானிகள் இராஜினாமா

(UTV | கொழும்பு) –  srilankan airlines இன் 42 விமானிகள் இராஜினாமா

srilankan airlines ஸ்ரீலங்கன் விமான சேவையின் 42 விமானிகள் கடந்த வாரம் இராஜினாமா கடிதங்களை கையளித்ததாகவும், 85 விமானிகள் விமான போக்குவரத்து அதிகாரசபையின் சான்றிதழ் கடிதங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

( srilankan airlines ) ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானி ஒருவர் மாத சம்பளம் சுமார் 10,000 டொலர் பெறுகிறார், ஆனால் டொலர் மதிப்பு 225 ரூபாய் என்ற குறைந்த அளவில் கணக்கிடப்படுகிறது,

மற்ற சர்வதேச விமான நிறுவனங்களின் விமானி 30,000 டொலர் முதல் 40,000 டொலர்வரை வரியில்லா சம்பளம் பெறுகிறனர் என்றும்,

மேலும், சுமார் 240 விமானிகள் பணிபுரிவதாகவும், சுமார் 80 விமானிகள் வெளியேறினால்,

இந்த வருடத்தின் நடுப்பகுதிக்குள் விமான நிறுவனம் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும், கடந்த டிசம்பர் மாதம் முதல் டொலர் 295 ரூபாவாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி நிகழ்த்திய கொள்கை பிரகடன உரை

முல்லைத்தீவில் ஆயுதங்கள், தங்கம் தேடிய அகழ்வுப் பணி இரண்டாவது நாளாக முன்னெடுப்பு!

Bar Permit களை இரத்து செய்துள்ளீர்களா ? இல்லையா ? சாணக்கியன் கேள்வி

editor