உள்நாடு

UNP சிரேஷ்ட உறுப்பினர்களே தேர்தலுக்கு தயாராகுங்கள்! – ஜனாதிபதி ரணில்

(UTV | கொழும்பு) – UNP சிரேஷ்ட உறுப்பினர்களே தேர்தலுக்கு தயாராகுங்கள்! – ஜனாதிபதி ரணில்

வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு ஜனாதிபதியுடன் ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதையடுத்து அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி இந்த சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

மேலும், (UNP)ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்டர்கள் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இருந்து பிரசாரம் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மற்றும் முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்தக் கலந்துரையாளலில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னர் அறிவித்திருந்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புதிய பொலிஸ்மா ஊடகப்பேச்சாளராக நிஹால் தல்துவ

இன்று முதல் திரையரங்குகள் மீண்டும் திறப்பு

தொடரும் நில அதிர்வுகள்; கம்பளை பிரதேசத்தில் நில அதிர்வு