(UTV | கொழும்பு) – பஸ் நடத்துனரால் கொலை செய்யப்பட்டார் பஸ் சாரதி
இ.போ.ச நீர்கொழும்பு டிப்போவின் பஸ் சாரதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பஸ் நடத்துனர் ஒருவரினாலேயே இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று (ஜன 24) இடம்பெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இவ்வாறு குறித்த இருவருக்குமிடையிலான , பணக் கொடுக்கல் வாங்கலின்போது தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්