(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளால் மனநோயாளிகளாக மாறுவோர் மருத்துவ மனைகளில் சேர்க்கப்படுவது அதிகரித்துள்ளதாக காலி கராப்பிட்டி போதனா மருத்துவமனையின் மனநல விஷேட மருத்துவர் ரூமி ரூபென் தெரிவித்துள்ளார்.
சுமார் 30 வீதம் வரை இந்த அதிகரிப்பு உள்ளதாகவும், மனநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் பொருளாதாரப் பிரச்சினை களால் மருந்துகளை உள்ளெடுப்பதை நிறுத்தியுள்ளனர்.
இதனால் அவர்கள் மீண்டும் மனநோய் தாக்கத்துக்கு உள்ளாகின்றனர். இதேபோன்று இலங்கையில் இருப்பதால் தமக்கு எதிர்காலம் இருக்காது என்ற விரக்தியால்
இளைஞர், யுவதிகள் மத்தியிலும் மனநோய் அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத அழுத்தங்கள் மற்றும் விரக்திக்கு உள்ளாகியிருக்கும் இளைஞர், யுவதிகள் மத்தியில் மனநோய் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள மன அழுத்தங்களை சமூகத்தின் மீது காட்டி வருகின்றனர். பலர் தமது கோபத்தை வெளிப் படுத்துவதற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் பொருளாதார பிரச்சினைகள் உட்பட பல்வேறு சிக்கல்கள் காரணமாக வயது வந்தவர்கள் மாத்திரமல்லாது பிள்ளைகளின் மன அழுத்தங்களும் அதிகரித்துள்ளன.
பல்வேறு காரணங்களால் தமது கற்றல் நடவடிக்கைகளை உரிய காலத்தில் நிறைவேற்ற முடியாத நிலையில் பிள்ளைகள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கொரோனா காலத்தில் இணைய வழி கற்பித்தல் காரணமாக கைத்தொலைபேசிகளுக்கு அடிமையான பிள்ளைகளில் பெரும்பா லானோர் மனநோய்களுக்கு உள்ளாகி கஷ்டப்படுகின்றனர் என்றும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්