உள்நாடு

தொடரும் குளிரான காலநிலை

(UTV | கொழும்பு) –  தொடரும் குளிரான காலநிலை

நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் இருப்பதுடன், தொடர்ந்தும் கடும் குளிரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சில இடங்களில் 75 மி.மீ. அதிகமான கனமழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பிற பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும்,
இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெள்ளியன்று 12 மணி நேர நீர் வெட்டு

இலங்கை – இந்திய கப்பல் சேவை நாளையுடன் நிறுத்தம்.

இன்றும் மற்றுமொரு எரிவாயு கப்பல் நாட்டுக்கு