உள்நாடு

 வெளிநாடு செல்ல முடியாததனால் உயிரை விட்ட இளைஞன்

(UTV | அக்குரஸ்ஸ) –  வெளிநாடு செல்ல முடியாததனால் உயிரை விட்ட இளைஞன்

இளைஞன் ஒருவர் (29 வயது) தனது குடும்பத்திற்கு உதவுவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறத் தவறியதால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்குரஸ்ஸவிலுள்ள தனது இல்லத்தில் கடிதம் ஒன்றை விட்டுவிட்டு, பெற்றோருக்கு உதவ முடியாமல் போனதில் வருந்திய அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனின் உறவினர்கள் அவரை அக்குரஸ்ஸ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்வதற்கு கொரிய மொழிப் பரீட்சையில் 5 புள்ளிகளை இழந்து சித்தி பெறத் தவறியதால் குறித்த இளைஞன் மனமுடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது தாயாரின் கூற்றுப்படி, அவர் மூன்று குழந்தைகளில் மூத்தவர், குடும்பத்திற்கு உதவ முடியாமல் சோகத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட விவகாரம் : உலமா சபையுடன் கைகோர்க்கும் முஸ்லிம் கவுன்ஸில்

இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளே கையிருப்பில்

நீர் வழங்கல் தொடர்பான பிரச்சிணை; தொலைபேசி இலக்கம் அறிமுகம்