(UTV | வவுனியா ) – வீதியில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு!வவுனியா – தாண்டிக்குளம் பகுதியிலிருந்து இன்று (10) காலை பொலிஸ் உத்தியோகத்தரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாண்டிக்குளத்திலிருந்து புதுக்குளம் செல்லும் பிரதான வீதியில் வளைவிற்கு அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்தின் காரணமாக இந்த மரணம் சம்பவித்திருக்கலாம் என சந்தேகம் ஏற்றப்பட்டுள்ளது.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மிகிந்தலை பகுதியினை சேரந்த பொலிஸ் உத்தியோகத்தர் வசந்த சந்தன நாயக்க (வயது 45) என்பரே சடலமாக மீட்கப்பட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්