உலகம்உள்நாடு

கஞ்சி பானை இம்ரானுக்கு தமிழக D.G.P எச்சரிக்கை!

(UTV | இந்தியா ) –  கஞ்சி பானை இம்ரானுக்கு தமிழக D.G.P எச்சரிக்கை!

நாட்டில் இருந்து தப்பி ஓடிய போதைப்பொருள் கடத்தல்காரர் கஞ்சிபானை இம்ரான் தமிழகத்துக்குள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழக பொலிஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

சென்னை புதுப்பேட்டையிலுள்ள ஆயுதப்படை வளாகத்தில் பொலிஸார் Super market இல் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொளவதற்காக வருகை தந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் பொது அவர் மேலும் தெரிவிக்கையில்,- வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தில் ஊடுருவி வந்துள்ள சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் சிறப்பு முகாமிலும், மேலும் சிலர் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து போதைப்பொருள் கடத்தல்காரர் கஞ்சிபானை இம்ரான் பிணையில் வெளியே வந்து, அங்கிருந்து தப்பி விட்டதாக கூறப்படுகிறது.
அவர் தமிழகத்துக்குள் ஊடுருவி வரலாம் என்ற தகவல் பரவி உள்ளது.
அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
அவர் தமிழகத்தில் ஊடுருவினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
உடனே கைது செய்யப்படுவார்.
பயங்கரவாதிகளை கண்காணிக்கும் சிறப்பு பிரிவு பொலிசாரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தீவிரவாத தடுப்பு பிரிவு தமிழகத்தில் அமைப்பது தொடர்பாக காலப்போக்கில் உரிய தகவல் தெரிவிக்கப்படுமென்றும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 21 பேர் பூரண குணமடைந்தனர்

இதுவரை 842 கடற்படையினர் குணமடைந்தனர்

ரணிலுடன் 80 பேர் வெளிநாடுக்கு செல்ல தயார் நிலையில்…!