உள்நாடு

போலி நாணயத்தாளுடன் இருவர் கைது!

(UTV | கொழும்பு) –  போலி நாணயத்தாளுடன் இருவர் கைது!

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் 22 மற்றும் 29 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள் கொடுத்து எரிபொருளை பெற முயற்சித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று போலி ஆயிரம் ரூபா நாணயத்தாளுடன் இருவரையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது .

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பேருந்துகள் வழமை போல் சேவையில் : இ.போ.ச

நிற்கும் பக்கத்தை ஜெயிக்க வைப்பதே உண்மையான வீரம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

editor

ஓய்வூதிய வயது தொடர்பில் தெளிவுபடுத்துதல்