(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை நிராகரிப்பு
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சதி மற்றும் கொலை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நௌபர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளின் பிணை கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று நிராகரித்துள்ளது.
இன்று, மேல் நீதிமன்ற நீதிபதிகளான தமித் தொட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இவ்வ்வாறு உத்தரவை அறிவித்த தலைமை நீதிபதி தமித் தோட்டவத்த, தற்போது பிரதிவாதிகளை பிணையில் விடுவிப்பது பொருத்தமானதல்ல. அதன்படி, கோரிக்கைகளை நிராகரிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, வழக்கை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්