உள்நாடு

நாய் வளர்த்ததால் கைது

(UTV | அளுத்கம) –  நாய் வளர்த்ததால் கைது

க்ரெட்டான் வகை நாய் வளர்த்த வெளிநாட்டு பிரஜை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் நாட்டு பிரஜையே (வயது 84) அளுத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பற்ற முறையில் நாயை வளர்த்த குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில் மூவ​ர் உள்ளிட்ட ஐவரை, சுதந்திரமாக திரிந்து வந்து கடித்த அந்த நாய், நீர்வெறுப்பு நோய்த் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்துள்ளது.

கைது  செய்யப்பட்ட நபர், க்ரேடன் வகையைச் சேர்ந்த 6 வயதான பெண் நாயொன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய், வீட்டிலிருந்து கடந்த 23ம் திகதியன்று தப்பியோடி ஐவரை கடித்துள்ளது. அத்துடன் வீட்டு நாய்கள் மூன்றையும் கடித்து குதறியுள்ளது.

கடித்து குதறப்பட்ட நாய்களில் இரண்டு மரணித்துள்ளதாகவும், பாதுகாப்பற்ற முறையில் நாயை வளர்த்த குற்றச்சாட்டின் கீழே, வெளிநாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார் மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் விற்கப்படாது

சுமந்திரன் MP பயணித்த வாகனம் விபத்து.

ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம் – சிலாபம் வீதியில் வாகன நெரிசல்