உள்நாடு

மீண்டும் அமெரிக்க குடியுரிமையாக விரும்பும் கோட்டாபய ராஜபக்ஷ

(UTV | கொழும்பு) – மீண்டும் அமெரிக்க குடியுரிமையாக ஆக விரும்பும் கோட்டாபய ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய தனது குடும்பத்தினருடன் டிசம்பர் 2022 இல் இலங்கையை விட்டு வெளியேறி இருந்தார்.
அவர் தற்போது விடுமுறையில் டுபாயில் இருக்கிறார்.
டுபாய் வழியாக அமெரிக்கா சென்றதாக முதலில் தெரிவிக்கப்பட்டது, ஆனால் கோட்டாபய ராஜபக்சவுக்கு அமெரிக்கா செல்வதற்கான விசா இல்லை.
இதன் காரணமாக, ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை மீள வழங்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் தனது வழக்கறிஞர்கள் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இருந்தாலும், 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அவர் கைவிட்ட அவரது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுப்பதற்கான கோரிக்கை இன்னும் அமெரிக்க அதிகாரிகளால் பரிசீலிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற வருடம், 2022 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது,நாட்டில் இருந்து தப்பிச் சென்ற பொது எந்தவொரு நாடும் புகலிடம் வழங்கத் தவறியதையடுத்து, தனது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்குமாறு கோட்டாபய  ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அமெரிக்க குடியுரிமைக்கான முன்னாள் ஜனாதிபதியின் முயற்சிகள் இன்னும் வெற்றிபெறவில்லை என்பதை அமெரிக்க தூதரகத்தின் ஆதாரம் உறுதிப்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான HIV பரிசோதனை நிறுத்தம்

தபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர்

நாளை முதல் ரயில் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை