உள்நாடு

தினேஷ் சாப்டர் கொல்லப்பட்ட போது காருக்கு அருகில் இருந்து வேகமாக சென்றவர் யார்?

(UTV | கொழும்பு) – தினேஷ் சாப்டர் கொல்லப்பட்ட போது காருக்கு அருகில் இருந்து வேகமாக சென்றவர் யார்? 

பிரபல தொழிலதிபரம், ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளருமான தினேஷ் சாப்டர் பொரளை மயானத்தில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்த காரை விட்டு வேகமாக சென்றவர் யார் என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவர், கொல்லப்பட்ட காரின் அருகே நின்றிருந்தவரை பார்த்ததாகவும், அவர் ஒல்லியாகவும், உயரமாகவும் இருந்ததாகவும், அவர் காருக்கு அருகில் இருந்து மயானம் நோக்கி மயானத்தின் பின்பக்கத்தால் சென்றதாகவும் மயான ஊழியர் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு, மயானத் தொழிலாளியிடம் சிஐடி அதிகாரிகள் தகவல் கேட்ட போது, அந்த நபரை மீண்டும் பார்த்தால் அடையாளம் காட்ட முடியும் என்றும், அவர் பேண்ட் மற்றும் சட்டை அணிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மற்றுமொரு கொவிட் நோயாளி தப்பிக்க முயற்சி

ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றத் தயார்

முழு நாட்டையும் எப்பொழுதும் முடக்கி வைக்க முடியாது