உள்நாடு

கண்டி நகரில் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க வேண்டாம் !

(UTV | கொழும்பு) –  நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கண்டி நகரில் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க வேண்டாம் என தூதரகங்கள் அறிவுறுத்தியுள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் இஷான் விஜேதிலக தெரிவித்துள்ளார்.

கண்டி ஈ.எல். சேனாநாயக்க நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கண்டி நகரில் முச்சக்கரவண்டி சாரதிகளின் சட்டவிரோத மற்றும் மோசடி செயற்பாடுகளால் இந்த அறிவுருத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், பல வெளிநாடுகளில் கண்டி நகரம் தொடர்பில் நல்ல அபிப்பிராயம் இல்லை எனவும் ஆணையாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அசாத் சாலியை விசாரிக்க ஐவரடங்கிய குழு

இலங்கைக்கு இந்திய அரசாங்கம் தனது பூரண ஆதரவை வழங்கும்

நீதி கோரி வடகிழக்கில் – மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!