உள்நாடு

முட்டையின் விலை குறைப்பு !

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு முட்டையின் விலையை குறைக்க தீர்மானிக்கவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் படி முட்டையினை 35 முதல் 40 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்வதற்கு தயாராகி வருவதாக குறித்த சங்கத்தின் தலைவர் ஆர்.எம் சரத் ரத்நாயக்க, தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துரைத்த அவர் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியாத வறிய மக்களுக்கு அதனை இலவசமாக வழங்கவும் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சில வெதுப்பக உரிமையாளர்கள் முட்டை விலையினை காரணம் காட்டி, வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை அதிகரித்து வருகின்றமை கண்டிக்கத்தக்கதெனவும் தற்போது, முட்டை கோழிகளின் பெருக்கங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று எஸ்ட்ராசெனகா தடுப்பூசி வழங்கப்படும்

தொடர்ந்தும் இந்தியா இலங்கைக்கு உதவும்

வரலாற்று தவறை செய்த சந்திரிக்கா