(UTV | கொழும்பு) – சமூக வலைத்தளங்களில் இடம் பெரும் விசா மோசடி தொடர்பில் புதிய தகவல்!
சமூக வலைத்தளங்கள், வட்ஸ்அப் (WhatsApp) ஊடாக இடம்பெறும் வீசா மோசடி தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க தூதரகத்தின்( கொழும்பு) வீசா பிரிவு, வீசாவிற்கான விண்ணப்பம் தொடர்பான செயற்பாடுகளுக்கு வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தாது மற்றும், வேலை வாய்ப்புகளை தாம் உறுதிப்படுத்தவில்லை என்றும் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய தூதரகத்திற்கு காப்பீடு தேவையில்லை என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீசா சேவைகளை வழங்குவதாகக் குறிப்பிட்டு ஒரு தரப்பினர் மோசடியில் ஈடுபடுவதற்காக இவ்வாறு செயற்படுவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளமையும் குயிருப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්