(UTV | கொழும்பு) – அரச சேவையின் நடைமுறைகள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இவ்வருட இறுதியில் பெருமளவிலான அரச உத்தியோகத்தர்கள் ஒய்வு பெறவுள்ள நிலையில் அரச உத்தியோகத்தர்களை சமநிலைப்படுத்தும் நோக்கில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய இக் குழுவில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், ஒருங்கிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්