(UTV | கொழும்பு) – நாட்டில் பயிரிடப்படும் ஏலக்காயின் அளவு குறைவடைந்துள்ளதன் காரணமாக சந்தையில் ஏலக்காயில் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ ஏலக்காயின் விலை பன்னிரண்டாயிரம் முதல் பதினான்காயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
அதற்கமைய இந்நாட்டில் வருடாந்தம் சுமார் முப்பது மெற்றிக் தொன் ஏலக்காய் நுகரப்படுகிறது. ஒரு கிலோ உலர் ஏலக்காயை பதப்படுத்த சுமார் ஆறு கிலோ பச்சை ஏலக்காய் தேவைப்படுவதுடன், சந்தையில் ஒரு கிலோ பச்சை ஏலக்காயின் விலை தற்போது ஏழாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் உற்பத்தி குறைவடைந்ததன் காரணமாக ஏலக்காய் உற்பத்திக்கு அதிக கேள்வி எழுந்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්