(UTV | கொழும்பு) – உலகம் முழுவது அதிக பயனர்களைக் கொண்ட சமூக வலைத்தளமான பேஸ்புக் ( facebook ) நிறுவனம் 725 மில்லியன் டாலர் தொகையை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.
அதன் படி பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அமெரிக்க பேஸ்புக் பயனர்களின் தகவல்களை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்த அனுமதித்ததாக கோரி பேஸ்புக் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைப்பெற்று கொண்டிருக்கும் வேளையில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் டாலர் தொகையை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.
அதனடிப்படையில் இந்த வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්