(UTV | கொழும்பு) – உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பூர்வாங்க அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த தேர்தலை விட இம்முறை அச்சடிக்கும் செலவு அதிகமாகும் எனவும் அரசாங்க அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை கோரும் திகதி இன்னும் அறிவிக்கப்படாத போதிலும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பிரதம தேர்தல் அதிகாரிகளை பெயரிடும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதுடன், உதவி தேர்தல் அதிகாரிகளின் பெயரிடும் வர்த்தமானியும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டு மூன்று அங்குலத்திலிருந்து இருபத்தி மூன்று அங்குலமாக மாறும். வாக்குச் சீட்டின் அளவு கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதால், அச்சிடுவதற்கான செலவும் மாறுபடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பேப்பர் விலை உயர்த்தப்பட்டாலும், அரசு அச்சகத்தில் தேர்தலுக்கு தேவையான பேப்பர் இருப்பதாகவும், இதனால் அவ் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்காது என்றும் இதன் பொது சுட்டிக்காட்டப்பட்டது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්