(UTV | கொழும்பு) – இறந்த சிறுவனின் சடலம் 52 நாட்களுக்கு பின் விசாரணைக்காக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது
ஹொரண, ஹல்தொட்ட, லெனவர ரஜமஹா விகாரையில் பெற்றோரால் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
12 வயதுடைய யெஷித் ஜும்ஹாமின் என்ற மொரகஹஹேன, வீதியகொட பிரதேசத்தில் வசித்த சிறுவனின் சடலம் இன்று (23) ஹொரண பிரதான நீதவான் சந்தன கலன்சூரிய முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலத்தை மீட்டு சட்ட வைத்திய அதிகாரியை பிரேத பரிசோதனை செய்யுமாறு ஹொரண நீதிமன்றத்தின் உத்தரவு கிடைத்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன் கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி விகாரை பீடாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் ஒக்டோபர் 28 ஆம் திகதி விகாரையின் களஞ்சிய அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், பெத்மகொட பொது மயானத்தில் ஒக்டோபர் 31 ஆம் திகதி உடல் அடக்கம் அடக்கம் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්