(UTV | கொழும்பு) – வானத்தை தொடும் அளவு உயரும் மின் கட்டணம்!
தற்போது புதிய மின்சார விலைச்சூத்திரத்தின் படி முதல் 30 மின் அலகுகளுக்கான கட்டணம் 8 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்
மின் கட்டண திருத்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி முதல் 30 அலகுகளுக்கான அலகு கட்டணம் 8 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்கவுள்ளது. 1,500 ரூபாய் நிலையான கட்டணங்களாகும்.
அதாவது 30 அலகுகளைப் பயன்படுத்துபவர் 3,000 ரூபாய் செலுத்த வேண்டும். மின் கட்டணம் மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், இது கறுப்புச் சந்தையைத் தாண்டிய விலை உயர்வு. மின் உற்பத்தி நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் நோக்கத்தில் இந்த விலை உயர்வு செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්