உள்நாடு

திரிபோஷா பற்றிய புதிய தகவல்

(UTV | கொழும்பு) –  திரிபோஷா பற்றிய புதிய தகவல்

நாட்டில் குழந்தைகளுக்கான திரிபோஷா உற்பத்திக்காக கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படும் சோளத்தில் அஃப்லாடொக்சின் அளவு அதிகரிப்பதால் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.

ஆயினும், கடந்த 02 மாத காலப்பகுதியில் வைத்திய அதிகாரி அலுவலகங்களின் கோரிக்கைக்கு அமைய சிறுவர்களுக்கு திரிபோஷா விநியோகம் செய்யப்பட்டதாககவும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சோளத்தில் உள்ள அஃப்லாடொக்சின் அளவு ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் எனவும், ஆனால் இந்நாட்டில் கிடைக்கும் மக்காச்சோளம் குழந்தைகளுக்கான திரிபோஷ தயாரிப்பதற்கு ஏற்ற தரத்தில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக குழந்தைகளுக்கு திரிபோஷா தயாரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து எதிர்காலத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உலக உணவு ஸ்தாபனத்தின் ஊடாக திரிபோஷா மூலப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் தற்போது உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கல்முனை பல்பொருள் விற்பனை நிலையத்தில் தீ

சுற்றுலாத்துறையை இலக்கு வைத்து ஹோட்டன் சமவெளி அபிவிருத்தி – ரணில் விக்கிரமசிங்க.

அழைத்துச் செல்லப்பட்ட குணசிங்கபுர யாசர்களுக்கு புனர்வாழ்வு