உள்நாடு

மேல் மாகாண பாடசாலைகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 75 பேர் கைது

(UTV | கொழும்பு) –     பாடசாலை மாணவர்களிடத்தில் போதைப்பொருளை ஒழிக்கும் கல்வி அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட விசேட வேலைத்திட்டத்தில் மேல் மாகாண பாடசாலைகளை அண்டிய பகுதிகளில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி மேல்மாகாணத்தில் 122 பாடசாலைகளை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 02 கிலோகிராம் 148 கிராம் மாவா, 09 கிராம் 375 மில்லிகிராம் ஹெரோயின், 01 கிராம் 522 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 10 போதை மாத்திரைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், இச் சுற்றிவளைப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

குறைந்தது 70 வீத வாக்களிப்பையே எதிர்பார்க்கலாம் – மஹிந்த

இராஜினாமா செய்த மோடி: மீண்டும் பிரதமராக 8ஆம் திகதி பதவியேற்பார்

மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை