உள்நாடு

நாட்டின் இளைஞர்களைக் கொண்டு விவசாயம் !

(UTV | கொழும்பு) –  அடுத்த வருடம் முதல் நாட்டில் பயன்பாட்டுக்கு உட்படுத்தாத விவசாய நிலங்கள் அரசுடைமையாக்கப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த நிலங்களை அண்டிய இளைஞர்களுக்கு அந்நிலம் வழங்கப்பட்டு அங்கு விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன் படி ஐந்து வருட காலத்திற்குள் காணி சுவீகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதுடன் இது தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு திருத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் சுமார் 100,000 ஏக்கரில் நெற்செய்கைகள் தற்போது மேற்கொள்ளப்படவில்லை எனவும், நெல் பயிரிடப்படாவிட்டால்  கூட ஏனைய பயிர்களை பயிரிட முடியும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தென் கடற்கரை பகுதியில் உலாவிய கடல் சிங்கம்

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பிலான மனு விசாரணை ஆரம்பம்

நகர சபையாக மாறியது சாய்ந்தமருது – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது