உள்நாடு

எண்ணெய் சுத்திகரிப்பு ஆரம்பம்!

(UTV | கொழும்பு) –  சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்குமுன் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சுத்திகரிப்பு ஆலையின் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்ட 90,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் அடங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன் .அதற்கான கொடுப்பனவுகளும் செலுத்தப்பட்டு கச்சா எண்ணெயை இறக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் காலங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை சீராக முன்னெடுப்பதற்கு மேலும் 90,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்குத் தேவையான கொள்முதல் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடற்கரையோரத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு – புத்தளத்தில் சம்பவம்.

பலஸ்தீன் மக்களுக்காக குரல் கொடுக்கவுள்ள இலங்கை பாராளுமன்றம்!

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகள் செப்டெம்பர் மாதம் மீள ஆரம்பம்