உள்நாடு

கைது செய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் புதிய தகவல்

(UTV | பேராதனை ) – கைது செய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் புதிய தகவல் 

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணைவேந்தர் தாக்கப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் நேற்று (12) இரவு பேராதனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 04  மாணவர்கள் இன்று (13) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து 12 மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டதாகவும், விசாரணைகள் நிலுவையில் உள்ளதாகவும் பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் வியாழக்கிழமை விவாதத்திற்கு

எரிவாயு அடுத்த மாதமே விநியோகிக்கப்படும்

ஜின்னா புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது