உள்நாடு

புத்தளம் கல்வி வலய பாடசாலைகளுக்குள் பொலிஸார் திடீர் தேடுதல்

(UTV | புத்தளம் ) –  புத்தளம் கல்வி வலய பாடசாலைகளுக்குள் பொலிஸார் திடீர் தேடுதல்

பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கொட்டுகச்சிய நவோத்யா வித்தியாலயத்தில் இன்று (13) பொலிஸ் தேடுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது

இன்று காலை 6 மணி முதல் பள்ளி தொடங்கும் வரை பள்ளிக்கு வரும் மாணவர்களின் பைகள் bag,  மற்றும் உடைகள் சோதனை செய்யப்பட்டன.

சிலகாலமாக பாடசாலைகளுக்கு பல்வேறு வகையான போதைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் வருவதால் பாடசாலை நடவடிக்கைகளில் பாரிய பிரச்சினை ஏற்றப்பட்டதனை தொடர்ந்து புத்தளம் கல்வி வலய பாடசாலைகளுக்கு உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்றி அவசர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக 30 ஆண் மற்றும் பெண்  பொலிஸார்  கொண்ட குழு அமைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலையை சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் பொலிஸாரால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. அஜீத் ஹெசிறியின் ஆலோசனையின் பேரில் பிரதேச போக்குவரத்து, சமூக மற்றும் சுற்றாடல் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.பி.சி. திரு.ரொட்ரிகோ அவர்களின் வழிகாட்டலின் கீழ், பிரதேச குற்றப்பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி பிரதம இன்ஸ்பெக்டர் சந்திரசிறி லால் உள்ளிட்ட அதிகாரிகள் தேடுதலில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி ரணில்பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான தீர்க்கமான சந்திப்பு!

மருத்துவ பீடத்தின் இறுதியாண்டு பரீட்சைகள் ஆரம்பம்

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை