(UTV | கொழும்பு) – ஓமானுக்கு பெண்களை கடத்திய அதிகாரிக்கு பிணை
ஓமானுக்கு பெண்களை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ. குஷானுக்கு பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நவம்பர் மாதம் 29ஆம் திகதி ஓமான் தலைநகர் மஸ்கட் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே இவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්