உள்நாடு

பேராதனை பல்கலை கழக மாணவர்கள் கைது..

(UTV | பேராதனை ) –  பேராதனை பல்கலை கழக மாணவர்கள் கைது..

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மீதான தாக்குதல் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டதை தொடர்ந்து
பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் 23 மற்றும் 25 வயதுடைய நிட்டம்புவ, கிரிதலை, மாத்தளை மற்றும் ஹேன்கமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பில் மேலும் 6 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்றைய தினம் (12) பல்கலைக்கழக மாணவர்கள், இந்த தாக்குதல் தொடர்பாக அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களின் மாணவர் தகுதியும் இரத்து செய்யப்பட்டது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சமூகங்களை மீளக்குடியேற ஜிஹான் ஹமீட்  அழைப்பு 

ஆன்லைன் முறையில் நிறுவன பதிவாளர் செயல்பாடுகள்

நீர்கொழும்பு நகர சபைக்கு சொந்தமான கடைத் தொகுதிக்கு பூட்டு