உள்நாடு

எதிர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்

(UTV | கொழும்பு) –  எதிர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நீதிமன்ற உத்தரவைப் பிறப்பிக்கக் கோரியே இவ்வாறு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரால் இந்த மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் கிரியெல்ல, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரலும் இவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தமிழ் முற்போக்கு கூட்டணியும் சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிக்கிறது

கொழும்பு வரை அலுவலக போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தீர்மானம்

கொரோனா : இது தீர்மானமிக்க தருணமாகும்