உள்நாடு

இன்று உச்சத்தை அடையும் வளியின் தரக்குறியீடு

(UTV | கொழும்பு) –  வளியின் தரக் குறியீடு (AQI) இன்று (9) உயர் மட்டத்தை அடையும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

✔ காற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து இந்நிலை சாதாரணமாகி வருவதாக வளி மாசு முகாமைத்துவ பிரிவின் பிரதம விஞ்ஞானி சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

✔ நாட்டின் பல பகுதிகளில் வளியின் தரம் நேற்று (8) 150 முதல் 200 வரை ஆரோக்கியமற்றதாக காணப்பட்டது.

✔ சுவாசம், நுரையீரல் அல்லது இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் , குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

✔ வளியின் தரம் ஆரோக்கியமற்ற அல்லது சிவப்பு வரம்பில் (151-200) குறைந்தால், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் செல்வதை குறைத்துகொள்ள வேண்டும்.
( குறிப்பாக சுவாசம் சம்பந்தமான நோய்களில் இருப்பவர்கள் )

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

DIG நுவன் மற்றும் DIG ரணசிங்க ஆகியோருக்கு இடமாற்றம்

அன்டிஜன் பரிசோதனை – 61 பேருக்கு கொரோனா உறுதி

பாராளுமன்ற தெரிவுக்குழு நாளை நியமனம்