உலகம்

மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன்

(UTV | ஆந்திரா) –   ஆந்திராவில் மருத்துவ கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொன்ற காதலனை ஆந்திரா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

(கொலை செய்யப்பட்ட பெண்) ,
ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் தபஸ்வி (வயது 21). விஜயவாடாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வந்தார்.

அவரது பெற்றோர் மும்பையில் வசிப்பதால்,  விஜயவாடாவில் உறவினர் ஒருவரது வீட்டி்ல் தங்கி படித்து வந்துள்ளார்.
இவருக்கும், (கொலைசெய்த காதலன்)  கிருஷ்ணா மாவட்டம் மணிகொண்டா பகுதியை சேர்ந்த என்ஜினீயர் ஞானேஸ்வர் (வயது 25) என்பவருக்கும் இடையே சமூகவலைத்தளம் ஊடாக பழக்கம் ஏற்றப்பட்டுள்ளது.

இதேவேளை தினமும் இருவரும் நட்பாக சமூகவலைத்தளம் மூலமாக பழகி வந்த நிலையில்,
காலப்போக்கில்  இது நட்பு காதலாக உருவெடுத்தது. இருவரும் சில மாதங்கள் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே திடீரென காதல் ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்குமிடையில் பிரிவு ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் காதலர் ஞானேஸ்வர் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவரது தொல்லை தாங்க முடியாத தபஸ்வி இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் ஞானேஸ்வரை அழைத்து பேசிய பொலிசார்,  “இனிமேல் மாணவியின் வாழ்க்கையில் தலையிட கூடாது”   என்று எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

காதலன் தொல்லை காரணமாக விஜயவாடாவில் இருந்து வெளியேறி குண்டூர் மாவட்டம் தக்கெல்லபாடு கிராமத்தில் உள்ள தனது தோழி வீட்டில் தங்கி மாணவி தபஸ்வி படித்து வந்துள்ளார்.

காதலர்களுக்கு இடையே உள்ள பிரச்சினையை தீர்த்து வைக்க தபஸ்வியின் தோழி முடிவு செய்துள்ளார். எனவே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காதலர் ஞானேஸ்வரை தோழி தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அங்கு நேற்று முன்தினம் காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மாணவி தபஸ்வி, தான் வேறொருவரை திருமணம் செய்யப்போவதாக தெரிவித்ததை அடுத்து, ஆத்திரம் அடைந்த ஞானேஸ்வர் மறைத்து கொண்டு வந்த அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தும் பிளேடால் மாணவியின் உடல் முழுவதும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

மேலும் ஆட்டை அறுப்பதை போல தபஸ்வியின் கழுத்தை மறுத்துள்ளார். இதனை தோழி தடுக்க முயன்றும் அவரால் முடியவில்லை. உடனே தபஸ்வி மயங்கி விழுந்துள்ளார்.

இதனை பார்த்ததும் தோழி அலறியுள்ளார். அதற்குள் ஞானேஸ்வர் தனது கைகளை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். . சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் ஞானேஸ்வரை பிடித்து கட்டி வைத்து, மாணவி தபஸ்வியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அனல் அவரின் உயிரை காப்பற்றமுடியாது போயுள்ளது. குறித்த பெண் ஏற்கவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், காதலர் ஞானேஸ்வரை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்தது பலி எண்ணிக்கை

பொலிவியா ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

எதிர்வரும் சில மாதங்களில் கொரோனாவுக்கு டாட்டா