உள்நாடு

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு செயட்பாடுகள் மீண்டும் ஆரம்பம்?

(UTV | கொழும்பு) –  சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு செயட்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் சுத்திகரிப்பு செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மசகு எண்ணெய் ஏற்றிய இரு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளது இந்நிலையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இந்த முடிவினை எடுத்துள்ளது.

2 இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் நாட்டிற்கு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், மற்றுமொரு கப்பல் இன்னும் சில தினங்களில் நாட்டை வந்தடையும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது.

Related posts

10 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக Dr.ரிஸ்வி ஸாலிஹ் நியமனம்

editor

இன்று 12 மணித்தியால நீர் வெட்டு

160 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு நோக்கி சென்றமையே தோல்விக்கு காரணம்: வனிந்து ஹசரங்க