உள்நாடு

  மீண்டும் அதிகரிக்கும் மருந்துகளின் விலை !

(UTV | கொழும்பு) –    மீண்டும் மருந்துகளின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

 

அரசமருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் அனைத்து மருந்துபொருட்களின் விலைகளும் அடுத்த மூன்று மாதங்களில் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என தகவல்கல் வெளியாகியுள்ளது.

80 வீதமான மருந்துகளின் கையிருப்புகள் முடிவடைந்துவிட்டுள்ள நிலையில் தற்போதைய நாணயமாற்று விகிதத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை ஏழு எட்டு மாதங்களிற்கு முன்னர் வழங்கிய விலைக்கு வழங்க முடியாது என அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொதுமுகாமையாளர் தினுசா தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாணய மாற்று வீதம் மாற்றமடைந்துள்ளமையினால் தற்போது ஒரு டொலர் 360 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் நாங்கள் இறக்குமதி செய்யும் மருந்துகளின் விலைகள் மாற்றமடையும் என என அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், பல வருடங்களாக எங்களுக்கு விநியோகம் செய்கின்ற உற்பத்தியாளர்களே தொடர்ந்தும் விநியோகிக்க உள்ளதால் சந்தையில் எங்களின் மருந்துகள் தொடர்ந்தும் மலிவாக காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே , புதிய மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டவுடன் விலை அதிகரிக்கலாம் என அறியமுடிகின்றது.

Related posts

தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி – கெஹலிய மீது குற்றச்சாட்டு

தடைப்பட்ட ரயில் சேவை இன்று முதல் வழமைக்கு

editor

ஜனாதிபதி அனுரவுக்கு சவுதி தலைவர்கள் வாழ்த்து

editor