உள்நாடு

இலங்கையில் நரிகள் ஆக்கிரமித்து வரும் கிராமம்

(UTV | யக்கல) –  இலங்கையில் நரிகள் ஆக்கிரமித்து வரும் கிராமம்

யக்கல வரெல்லவத்தை பிரதேசத்தில் நரிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக குறித்த கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

யக்கல ஹெட்டியதெனிய, மிரிஸ்வத்த, ஹன்சகிரியஆகிய பகுதிகளில் சில மாதங்களாக நரிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதகாகவும்
குறித்த பகுதியில் விவசாயம் செய்யப்படாத நெல் வயலை ஒட்டியுள்ள காடுகளில் இருந்து நரிகள் கிராமத்திற்கு வருவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் தினமும் காலை வேலையிகளில் பட்டாசுகளை கொளுத்தி அதன் பின்னரே செல்வதாகவும், இதற்கு அதிகாரிகள் உடனடி தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்ப்பிடத்தக்கது.

Related posts

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பிலான அறிவித்தல்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் இன்றைய பெறுமதி

கொவிட் தடுப்பூசி செலுத்துகை தொடர்பிலான விபரம்