உள்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட வேலைத்திட்டம்

(UTV | கொழும்பு) –     விசேட தேவை உடையோர்களுக்கான புதிய வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

நேற்றையதினம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பல திறமைகள் கொண்ட விசேட தேவையுடையவர்கள் இருப்பதை கருத்திற்கொண்டு அவர்களின் படைப்புத் திறமைகளை நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக திறம்பட பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

அதன் படி, விளையாட்டு, சுகாதாரம், இளைஞர் விவகாரம் உள்ளிட்ட பல அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்படும் இப்புதிய வேலைத்திட்டத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

அதற்கமைய அரச நிறுவனங்களில் விசேட தேவையுடையோரின் நலன் தொடர்பில் நிலவும் குறைபாடுகள் குறித்து கவனத்திற்கு கொண்டு வந்த ஜனாதிபதி அது தொடர்பில் ஆராய்ந்து அத்துறைகளில் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

 

Related posts

போலி வேலை வாய்ப்பு பணியகத்தினை சுற்றி வளைத்தது, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்

அவசர பராமரிப்பு வேலை – 18 மணிநேர நீர் வெட்டு

இலங்கை விமானப் படைக்கு புதிய பிரதானி நியமனம்