உள்நாடு

இனி மிருகக்காட்சி சாலைகளில் மிருகங்களுடன் புகைப்படம் எடுக்க புதிய முறை

(UTV | கொழும்பு) –  இனி மிருகக்காட்சி சாலைகளில் மிருகங்களுடன் புகைப்படம் எடுக்க கட்டணம் அறவிடும் நடைமுறை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அடுத்தாண்டு முதல் புகைப்படம் எடுத்தல் மற்றும் விலங்குகளுக்கு உணவளிக்க தனி டிக்கட் முறையை அறிமுகப்படுத்த தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
வருமானத்தை அதிகரிக்கும் வகையிலேயே இம்முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெஹிவளை, பின்னவல மற்றும் ரிதியகம விலங்கியல் பூங்காக்கள் மற்றும் பின்னவல யானைகள் சரணாலயத்தின் அபிவிருத்திக்காக அடுத்த வருடம் 285 மில்லியன் ரூபாவை செலவிட எதிர்பார்த்துள்ளதாகவும்
அவ்வறான அபிவிருத்தி திட்டங்களுக்குத் தேவையான நிதி, ஒருங்கிணைந்த நிதி மற்றும் விலங்கியல் பூங்கா மேம்பாட்டு நிதி மூலம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராட்டுவதில் கிழக்கு மாகாண அதிபர், ஆசிரியர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளதாக இம்ரான் எம் பி குற்றச்சாட்டு

editor

இன்றும் மின்வெட்டு

ஹரீனின் Torch இனால் சபையில் அமைதியின்மை