உள்நாடு

  நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள்பாவனைக்கு எதிராக போராடுவதற்கு இலங்கைக்கு உதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவிடம் கோரிக்கை

(UTV | கொழும்பு) –     நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள்பாவனைக்கு எதிராக போராடுவதற்கு இலங்கைக்கு உதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலைதீவு உப ஜனாதிபதி பைசல் நசீம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் இலங்கையின் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , ✔இலங்கையின் உயர் தொழில்நுட்ப விவசாயத் துறை, கப்பல் சுற்றுலா மற்றும் உயர்தர சுற்றுலாத் துறைகளில் முதலீடு செய்யுமாறு மாலைதீவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

மேலும் , ✔காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு இலங்கையுடன் கைகோர்க்குமாறும்,
பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்தும் இருவரும் கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
✔போதைப்பொருளுக்கு எதிராகப் போராடுவதற்கு மாலைதீவின் உதவியையும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வைத்தியசாலையில் சிறுவருக்கான இருதய சிகிச்சைகள் நிறுத்தம் – தினேஷ் யாப்பா.

பிரிவினைவாத டாலர்கள் நம் நாட்டில் முதலீடு செய்வதை நாங்கள் எதிர்க்கவில்லை

சுகாதார ஆலோசனைகளை நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை