உலகம்

உக்ரைன் தூதரகத்தில் குண்டு வெடிப்பு !

(UTV |  உக்ரைன் ) –   உக்ரைன் தூதரகத்தில் கடிதம் மூலம் அனுப்பப்பட்ட குண்டு வெடித்துள்ளது !

 

உக்ரைன் நாட்டின் தூதரகத்திற்கு கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை மற்றும் இராணுவ அமைச்சகங்கள் தெரிவித்துள்ளது.
(ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் அமைந்துள்ளது)

அது மட்டுமல்லாது, நேற்று மேட்ரிட் நகருக்கு வெளியே உள்ள ஜாரகோசா நகரில் விமானப்படை தளத்திலும் இவ்வாறான வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தொழிற்சாலையில்தான் கையெறி குண்டு லோஞ்சர்கள் தயாரிக்கப்பட்டு உக்ரைனுக்கு அனுப்பிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

மேலும் , உக்ரைன் தூதரகத்தில் வெடித்த கடிதத்தில் அனுப்பப்பட்ட வெடிகுண்டும், விமானப்படை தளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டும் ஒரே நபரால் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இது குறித்து மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உக்ரேன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை – ரஷ்ய ஜனாதிபதி புடின்

editor

“காசாவுக்கு குடிநீர் வழங்க இஸ்ரேல் ஒப்புதல்”

ஓமான் கடலில் கப்பல் மூழ்கியதில் காணாமல் போன 9 பேர் மீட்பு