உள்நாடு

 இணையம் ஊடாக பணம் மோசடி- 8 பேர் கைது

(UTV | காலி ) –    இணையம் ஊடாக பணம் மோசடி- 8 பேர் கைது!
இணையம் ஊடாக பணம் மோசடி செய்தமை தொடர்பில் 8 பேர் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13,765,000  ரூபா மோசடி செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேட்கொள்ளப்பட்டதையடுத்து, கடந்த 26ஆம் திகதி நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாதுவ, பிலியந்தலை, பண்டாரவளை மற்றும் காலி ஆகிய இடங்களில் இடம்பெற்ற பண மோசடி சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காலி, வெலிகம, ரத்கம, வாதுவ மற்றும் பட்டியகெதர ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 22 மற்றும் 36 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது நாளை 30 திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய Three Phase Power அகற்றம்

editor

தொடர்ச்சியாக IOC எரிபொருள் விநியோகம்

வாகன இறக்குமதிக்கு எதிர்காலத்தில் அனுமதி