உள்நாடு

பெரிய வெங்காயத்தின் விலை குறைவடையும்

(UTV | கொழும்பு) – சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை குறையுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதன்படி விசேட பண்ட வரி வீதத்தை குறைக்க உணவு கொள்கை குழு பரிந்துரைத்துள்ளதால் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறையும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் வெங்காயத்திற்கான தேவை வருடத்திற்கு சுமார் 300,000 மெட்ரிக் டன் அளவில் வெங்காயத்திற்கான தேவை உள்ளது.

இதில் இறக்குமதிகள் மூலம் 86% வீதமானது பூர்த்தி செய்யப்படுகிறது.
இதன் மூலம் நாட்டின் வெங்காய தேவையில் 14 சதவீதமானவற்றை பூர்த்திசெய்யபடுகின்றது.

இம்மாதத்தின் மூன்றாம் வாரத்தில்,ஒரு கிலோகிராம் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை 340 – 400 ரூபாவாகவும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை 290 – 390 ரூபாவாகவும் இருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய பூங்காக்களுக்குள் நுழைய பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

நாளாந்த மின்வெட்டு இடம்பெறாத இடங்கள்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலியவுக்கு பிணை

editor