(UTV | கொழும்பு) – நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக வங்கி முறையை வலுப்படுத்தும் முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையை யாசகம் பெறும் நாடாக மாற்றுவதற்கு தாம் தயாரில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் 86ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இலங்கையர்களாகிய நாம் சுய முயற்சியில் எழுந்து நிற்க வேண்டும். அதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை இவ்வருட வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைத்துள்ளேன். இலங்கையை சர்வதேச மட்டத்துக்கு உயர்த்தக்கூடிய எண்ணக்கருவை லலித் அத்துலத்முதலி கொண்டிருந்தார்.
எதிர்காலத்தில் பட்டப்பின் படிப்பை தொடரக்கூடிய வகையில் லலித் அத்துலத்முதலியின் பெயரில் பல்கலைக்கழகமொன்றை இலங்கையில் நிறுவவுள்ளதாக ஜனாதிபதி மேலும் கூறினார். இலங்கை இளைஞர்கள் சர்வதேச சந்தையுடன் சுயமாக தொடர்புபடக்கூடிய வசதிகளை வழங்கும் சிறப்பு டிஜிட்டல் தள அறிமுகமும் லலித் அத்துலத்முதலி அறக்கட்டளையினால் இதன்போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්