வகைப்படுத்தப்படாத

21 இலட்சம் பெறுமதியுடைய யாபா மாத்திரைகளுடன் ஒருவர் சிக்கினார்

(UTV|COLOMBO)-வெல்லம்பிட்டிய, கொலன்னாவ பிரதேசத்தில் யாபா என்ற வகையைச் சேர்ந்த போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிடப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து யாபா என்ற வகையைச் சேர்ந்த 1475 போதை மாத்திரைககள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 21 இலட்சம் ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

8 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

Galle Road closed due to protest

இந்தியாவில் கோர விபத்து:ஸ்தலத்திலேயே 17 பேர் பலி