கேளிக்கை

21 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா

(UTVNEWS|COLOMBO) – ஐஸ்வர்யா ராய், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படம் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கல்கியின் வரலாற்று புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளார்.

அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், பார்த்திபன், அனுஷ்கா ஷெட்டி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பல நட்சத்திரங்களின் பெயர்கள் இந்த படத்தில் நடிக்க போவதாக செய்திகள் வெளியாகின.

இதில் ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அவர் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜீன்ஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் மீண்டும் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

நயன்தாரா பட ரீமேக்கில் தமன்னா?

இனிமேல் அதுமாதிரி நடிக்கும் எண்ணம் இல்லை…

பிரபுதேவாவுடன் மீண்டும் இணையும் தமன்னா